தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி குழந்தைகளுக்கு பரிசு வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி ஆரோக்கியமான குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் பரிசு வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரம் 14-ம் தேதி துவங்கி வரும் 28-ம் தேதி வரை மூன்று சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி நகராட்சியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க திட்டம் சார்பில் மாவட்ட சுகாதாரத் துறையும், மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து, குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கினார். ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கிய கலெக்டர், நகராட்சி சார்பில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு வகைகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சந்திரா அனைவரையும் வரவேற்று பேசினார். சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் கோவிந்தன், சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம், மாவட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து திட்ட அலுவலர் செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழா நிறைவில் ஊட்டச்சத்து பணியாளர்கள் சார்பில் விழிப்புணர்வு பாடல் பாடப்பட்டது. தொடர்ந்து நகராட்சியில் மாவட்ட கலெக்டர் மரக்கன்றுகளை நட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 8 =