தமிழகத்தில் இன்று 5,752 பேருக்கு கொரோனா

Nurse wearing respirator mask holding a positive blood test result for the new rapidly spreading Coronavirus, originating in Wuhan, China

தமிழகத்தில் இன்று 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,08,511-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,46,424-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79,722-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37,80,107-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 77,512 பேர் குணமடைந்த நிலையில் 92,068 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,136 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,584 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை கூறியதாவது: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,53,165 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,799 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 53 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,434-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 991 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,49,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 170 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 59,68,209 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 72 = 78