ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிறு கடைசி வார வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி கடைசி ஞாயிறுக்கிழமை வார வழிபாடு நடைபெற்றது.

ஐந்து மாதங்களாக கோவில் ஹிக்தர்கள் வழிபாட்டுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் மக்கள் கோவிலுக்கு செல்லவில்லை. அண்மையில் தடை நீக்கப்பட்டதால் நேற்று பக்தர்கள் ஆர்வமுடன் கோவிலுக்கு வந்தனர். கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள் கண்மலர் வாங்கி வந்து அர்ச்சனை செய்து கண்மலரை உண்டியலில் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் வயிற்றில் மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பலர் பால்குடம் எடுத்து வந்து அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

மாலையில் முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், திரவியம் போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்தனக்காப்பு சாத்தப்பட்டு மலர்சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு பலவித விளக்குகளால் தீபாராதணை நடைபெற்றது. பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். வேண்டுதல்காரர்கள் நிலக்கடலை, சர்க்கரைப் பொங்கல், எலும்பிச்சை சாதம் ஆகியவற்றை பிரசாதமாக வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

44 − 36 =