தஞ்சாவூரில் அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூரில் அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தஞ்சாவூர் மண்டலத்துக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சொந்த வீடு இல்லாத வியாபாரிகளுக்கு அரசிடம் எடுத்துரைத்து வீட்டுமனை பட்டா அரசு மூலம் சொந்தவீடு பெற்றுத் தருதல் எனவும், தஞ்சாவூர் மண்டலத்தில் வியாபாரிகளின் குழந்தைகள் நலனுக்காக போட்டித்தேர்வு பயிற்சி மையம் ஏற்படுத்துவது எனவும், மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் மூலம் வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற்றுத்தருவது எனவும், தமிழக அரசு துவங்கியுள்ள நலவாரியத்தில் அனைத்து வியாபாரிகளை இணைப்பது எனவும், கொரோனா காலத்தில் இறந்த வியாபாரி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும்.

இறந்த வியாபாரியின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டுமெனவும், கொரோனா காலங்களில் வியாபாரிகளுக்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை மதித்து வியாபாரிகள் பாதுகாப்புடன் வியாபார பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொரோனா காலங்களில் அரசினுடைய கொள்கை முடிவுக்கு எதிராக வியாபாரிகள் செயல்படக் கூடாது எனவும், வெளிமாநிலம் வெளிநாட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு தேவையான சட்ட ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கஜேந்திரன், கொள்கை பரப்புச் செயலாளர் சேகரன், நாகை மண்டல செயலாளர் ஜான்சன், மாவட்ட தலைவர் ஐயப்பன், மாவட்ட செயலாளர் செபாஸ்டின், செல்வகுமார், மாநகர தலைவர் நூர்முகமது, மாநகரச் செயலாளர் முருகராசு, மண்டல துணை அமைப்பாளர் திராவிடமணி உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 + = 81