கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.

திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளரும், முன்னாள் நகர மன்ற தலைவருமான பரிதாநவாப் மற்றும் நகர செயலாளர் நவாப் ஆகியோர் தலைமையில் அதிமுக, பாமக, பிஜேபி, அமமுக ஆகிய கட்சியிலிருந்து விலகி 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் திமுகவில் இணைந்தனர்.

இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், வெற்றி செல்வன், மாநில விவசாய அணி துணை தலைவர் வெங்கடேன், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி சேகர், பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர். முன்னதாக அனைவரும் திமுகவின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கபட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

38 − = 28