பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி சிவன் கோவிலில் பிடிபட்ட 12 அடி மலைப்பாம்பு

பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி சிவன் கோவிலில் பிடிபட்ட 12 அடி மலைப்பாம்பு. வனத்துறையினர் செவினி மலையில் உயிருடன் விட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் சுத்தம் செய்யும் பணியில் ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது புல்தரைக்குள் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் தேவிபழனிச்சாமி, துணைத்தலைவர் பழனிவேலு, ஊராட்சி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் இணைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனச்சரக அலுவலர் மேரிலென்சி, வனவர் மேகலா ஆகியோரது அறிவுறுத்தலின்படி வனக்காப்பாளர் கனகவள்ளி, வனக்காவலர் கருணாநிதி ஆகியோர் சிவன்கோவிலுக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடித்து செவினி மலையில் உயிருடன் விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

95 − 88 =