பழனியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பழனியில் இந்திய குடியரசு கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்து ரவுண்டானாவில் இந்திய குடியரசு கட்சியின் சார்பாக கோரிக்கை மனு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்புரையாற்றதினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்: தமிழக அரசு கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற விவசாயக் கூலிகள் மற்றும் அடிப்படை கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் தொடரும் தலித் ஆணவப்படுகொலைகள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலித் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஏற்படுகின்ற தீண்டாமைக் கொடுமைகளை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் உள்ஒதுக்கீடு என்ற பெயரில் தலித் மக்களின் ஒற்றுமையை சிதறடிக்கும் மத்திய, மாநில அரசுகளின் உள்ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடரும் தலித் வன்கொடுமை கட்டுப்படுத்த இந்திய குடியரசு கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையான தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் போலவே தமிழகத்திலும் மாநில தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கட்சித் தொண்டர்கள் நகர செயலாளர் பகவதி, மாணவரணி அமைப்பாளர் மாரிமுத்து, நகர இளைஞரணி செயலாளர் காளிதாசன், கார்த்திகேயன், செந்தில், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு கையில் கட்சி கொடிகளை ஏந்தியவாறு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + = 18