மக்கள் நீதி மய்யத்தின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட ஊடக செய்தி தொடர்பாளர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு நன்றி

மக்கள் நீதி மய்யத்தின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட ஊடக செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ஜெய் பார்த்திபன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில்:

எம்மை மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாவட்ட செயலாளராக நியமித்த மக்களின் தலைவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசனுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்.

இந்த பணிக்கு எம்மை பரிந்துரை செய்த கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், கட்சியின் பொதுச் செயலாளர் முருகானந்தம், கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர்,குமாரவேல், கட்சியின ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், புதுக்கோட்டை மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் அவர்களுக்கும் எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும்.
மக்களுக்கான கட்சியில் பணியாற்றுவதை பெருமையென்று கருதாமல் கடமையென்றே கருதுகிறேன். கட்சியின் கொள்கைகளையும், கருத்துகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் சிறப்பான பணியை வழங்கிய தலைவர் கமல் சீரிய தலைமையின்கீழ் உண்மையான மக்களாட்சி ஏற்பட பாடுபடுவேன் என்று நம்பிக்கையுடன் உறுதிகூறுகிறேன் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 67 = 71