புதுக்கோட்டை பேராங்குளத்தை சிறுவர் பூங்காவாக மாற்ற புதுகை வரலாறு கோரிக்கை

புதுக்கோட்டை பேராங்குளத்திற்கு ஒருசொட்டு தண்ணீர் கூட வர வாய்ப்பில்லாத நிலையில் சிறுவர் பூங்காவாக மாற்ற புதுகை வரலாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.

புதுக்கோட்டை பேராங்குளம் 50 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. குளத்தை சுற்றிலும் பேவர்பிளாக் கல்லில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் எக்கு பைப் மூலம் கைப்பிடிச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. குளம் நிரம்பியவுடன் தண்ணீர் வெளியேறுவதற்கு குளத்தின் மேற்பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே பாலம் போடப்பட்டுள்ளது.

அந்தப் பாலம் போடுவதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம் சரியாக மூடப்படாததால் மூன்றாண்டுகளாக பல விபத்துகளை பொதுமக்கள் சந்திந்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவையும் செய்தவர்கள் குளத்திற்குள் தண்ணீர் வருவதற்கு வழிசெய்யவில்லை என்பது வேதனையின் உச்சம். குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள கால்வாய் வழியே ஓடும் மழைநீர் பல குளங்களை நிறைத்துக் கொண்டிருந்தாலும் இந்த குளத்திற்குள் ஒருசொட்டுநீர் கூட வராதது நகராட்சியின் அலட்சியமே என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட கலெக்டருக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் வைக்கும் கோரிக்கையோ, இந்தக்குளம் நிரம்பினால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது தண்ணீர் நிரப்ப வாய்ப்பில்லை என்றால் அழகிய சிறுவர் பூங்காவாக மாற்ற ஆவணம் செய்தால் இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் பயன் பெற வாய்ப்புண்டு இல்லையென்றால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி அவர்களின் சொத்தாக மாறிவிடும் என்று எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 37 = 46