தேனிமலை முருகன் கோவில் நூழைவு வாயிலில் உள்ள உயர் கோபுர மின் விளக்கினை திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி துவக்கி வைத்தார்

பொன்னமராவதி ஒன்றியம் தேனூர் ஊராட்சி தேனிமலை முருகன் கோவில் நூழைவு வாயிலில் உயர் கோபுர மின் விளக்கினை திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் தேனூர் ஊராட்சி தேனிமலை முருகன் கோவிலின் முகப்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கினை திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுபதி திறந்து வைத்தார்.

இதில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் வேலு, வெங்கடேசன், செயலாளர்கள் முத்து, அடைக்கலமணி, நகரச் செயலாளர் அழகப்பன், தேனூர் ஊராட்சி தலைவர் கிரிதரன், தொட்டியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோலையப்பன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜன், ஜெயலெட்சுமி, காஜாமைதீன், திமுக நிர்வாகிகள் சாமிநாதன், சிக்கந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 + = 76