கொரனோவிலிருந்து மக்கள் விடுபட வேண்டி தஞ்சையில் சுவாமி வழிபாடு   

கொரனோ தொற்றால் உலக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. கொரனோ தொற்றால் பொருளாதார பாதிப்புகளையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் உலக மக்கள் நலம் பெற வேண்டியும் கொரனோ தொற்று பாதிப்பிலிருந்து விடுபடவும் தஞ்சையை அடுத்த அரசூர் கிராமத்தில் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலில் சிறப்பு    பூஜைகள் செய்யப்பட்டது வேதபாராயணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திருவையாறு தென்னை ஆராய்ச்சியாளர் வா.செ. செல்வம் முரளி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

98 − = 97