சாமானிய ஏழை-எளிய பொது மக்களுக்காக மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு வந்தாலும் அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சமூக அக்கறை உடைய பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் அருண்மொழி என்பவர் தமக்கு ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் அவரின் பதிவிற்கு பல ஆயிரக்கணக்கானோர் தங்களது பாராட்டுகளையும் சமூக அக்கறையின்றி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்களை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேல் கிணற்றை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் செய்ததை போல் இச்செய்தி தோன்றினாலும் தீர்வு என்னவோ சாமானியர்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது.

அருண்மொழி வெளியிட்டுள்ள பதிவு புதுகை வரலாறு வாசகர்களுக்காக செய்தி வடிவில்:
இம்மாதம் ஆகஸ்ட் மூன்றாம் தேதி இரவு 7 மணி அளவில் புதுக்கோட்டையில் ஐங்கரன் காபி என்ற பெயரில் பேக்கரி நிறுவனத்தை நடத்தி வரும் அருண்மொழி தனது மாமனார் மோகன்தாஸ் [வயது70] உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவர் ஆலோசனைப்படி சிடி ஸ்கேன் எடுத்துள்ளனர். பின்னர் மருத்துவர் அறிக்கையை பார்த்தபின் அவருக்கு மூலம் தொடர்புடைய தொந்தரவு காரணமாக வழி இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளனர்.இதணை தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் Covid 19 என்று அனுமதித்தால் மட்டுமே வைத்தியம் பார்க்க முடியும் என்றும் அதற்கு ஒரு நாளைக்கு ரூ. 25,000 வீதம் பத்துநாள் அனுமதிக்க வேண்டும் மொத்தத்தில் ரூ. 2,50,000 கட்டினால் தான் மருத்துவம் பார்க்க முடியும் என்று கூறிவிட்டதாகவும் நாங்கள் கொண்டு சென்ற சிடி ஸ்கேன் ரிப்போர்ட் அவர்களிடம் காண்பித்தபோது கொரோனா உறுதியாக உள்ளதாகவும் நீங்கள் பணத்தை கட்டினால் நாங்கள் வைத்தியம் பார்ப்போம் என்று கூறியதாகவும் கூறும் அருண்மொழி நாங்கள் ஜெனரல் வார்டில் இருக்கிறதா? என்று கேட்டோம் இருக்கிறது அதில் அனுமதிக்க வேண்டும் என்றாலும் நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் பத்து நாட்களுக்கான தொகை ரூ.1,50,000 மொத்தமாகவும் கட்டவேண்டும். கட்டினால் மட்டுமே அனுமதிப்போம் என்றும் நீங்கள் நாலு நாளில் Covid 19 இல்லை என்று தெரிந்தால் ரூ.60,000 போக மீதி பணத்தைத் திருப்பித் தந்து விடுவோம் என்றும் கூறியதாகவும் சாதாரண மூலத்திற்கு அனுமதித்தது இவ்வளவு பிரச்சனை என்றால் நாம் எங்கே செல்வது என்று அடுத்ததாக மற்றொரு மருத்துவமனை நோக்கி சென்றோம்.

நாங்கள் கொண்டு சென்ற சிடி ஸ்கேன் அவர்களிடம் காண்பித்தபோது லேசாக நுரைஈரல் பகுதியில் சளி இருப்பதாகவும். இதுcovid 19 தான் என்று உறுதியாக கூற முடியாது இருப்பினும் அதுபோலத்தான் உள்ளது என்றும் இங்கு 15 பேர்க்கான அனுமதி மட்டுமே உள்ளது ஏற்கனவே 15 பேர் சிகிச்சையில் உள்ளதால் நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று covid 19 பரிசோதித்த பிறகு லேசாக இருந்தால் மட்டுமே நாங்கள் எடுத்துக்கொள்வோம் இங்கு அதற்கு குறைந்தது ரூ.68 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை ஆகும் என்றும் எத்தனை நாள் தங்கி இருக்கிறார்களோ மீதி பணம் திருப்பித்தரப்படும் என்றும் கூறினார்கள் இதற்கு மேல் புதுக்கோட்டையில் எங்கு சென்றாலும் இதே நிலை தான் என்று முடிவுக்கு வந்த பிறகு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசரப்பிரிவில் அனுமதித்து இரவு 302 வார்டில் உறங்க வைத்துவிட்டு இரவு 12 மணி அளவிற்கு வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் அதிகாலை நாலரை மணிக்கு சிகிசையில் இருந்த மோகன்தாஸ் பாத்ரூம் செல்லும் போது வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு உள்ளூர் ஆளும் அரசியல் பிரமுகர்களிடம் எனது மாமனாரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளேன் என்று தாம் கூறிய பிறகு வைத்தியம் வேகமாக பார்க்கப்பட்டது icuக்கு மாற்றப்பட்டு ஆக்சிஜன் பொருத்தப்பட்டு வைத்தியம் பார்க்கப்பட்டது. Covid 19 டெஸ்ட் எடுக்கப்பட்டது CT scan எடுக்கப்பட்டது. மறுநாள் காலை எட்டு மணிக்கு அரசு மருத்துவமனை சிடி ரிப்போர்ட் வாங்கிக்க சொல்லியிருந்தார்கள் இரவு முழுவதும் ஐசியூ வார்டில் இருந்துவிட்டு மறுநாள் காலை மாமனாருக்கு கோவிட்19 தோற்று இல்லை என்று அறிக்கை வந்தது சரி நாம் உடனடியாக அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து செல்லலாம் என்று சிடி ஸ்கேன் ரிப்போர்ட் வாங்க அங்கு சென்ற பொழுது பணியாற்றும் பணியாளர் மருத்துவர் வந்தால்தான் ஸ்கேன் ரிப்போர்ட் தரப்படும் என்று கூறினார்கள். நான் மருத்துவர் எப்போது வருவார் என்று கேட்டேன் அவர் வரும்பொழுது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் அதன் பின்னர் முதல்வர் வாயிலாக ஆர்எம்ஓவிடம் விவரத்தைச் சொல்ல அவரோ சம்பந்தபட்ட பணியாளரிடம் கொடுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது ஆனால் நீங்கள் எங்கு சென்றாலும் எதுவும் நடக்காது என்று சம்பந்தபட்ட பணியாளர்கள் CT scan தரமுடியாது என கூறிவிட்டதாக கூறும் அருண்மொழி. மாமனாரை உடனடியாக அங்கிருந்து அழைத்துக்கொண்டு தஞ்சை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வந்துவிட்டதாகவும் இதை நான் ஏன் பதிவிடுகிறேன் என்றால் அனைத்து அதிகாரமும் அரசியல் பலமும் உள்ள நமக்கே இந்த நிலை என்றால் சாதாரண அடித்தட்டு மக்களுக்காக பயன்படுத்துவதற்காக நமது சுகாதாரதுறைஅமைச்சர் விஜயபாஸ்கர் பல எதிரிகளை சம்பாதித்து புதுக்கோட்டையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உருவாக்கி வைத்துள்ளார். அதில் சில பணியாளர்களால் தங்களின் பணியை சரிவர செய்யாததால் அவரும் மன உளைச்சலுக்கும் ஆளாகி நிறைய உயிர் சேதம் அடைகிறது. தலையில் அடிபட்டு அதுவும் அரசு மருத்துவமனையிலேயே கழிவறை சரியில்லாததால் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு உள்ளவர்களை உடனடியாக கவனிக்காத இந்த பணியாளர்களை உடனடியாக அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதங்கபடும் அருண்மொழி இன்றும் நான் அந்த ரிப்போர்ட்டை வாங்கவில்லை நாம் வசதி இருப்பதால் உடனே அழைத்துக்கொண்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததால் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல்வேறு பேரிடர் காலத்திலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியும் அரசின் புதிய திட்டங்களையும் புதுக்கோட்டைக்கு கொண்டுவந்து செயல்படுத்தி கண்காணித்து வரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ணில் மண்ணைத் தூவும் போலி ஆசாமிகள் மீது அவரே நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தன் மீதான நன்மதிப்பு மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்பது நிதர்சனம்.