மதுரை சரவணா மருத்துவமனை, சூர்யா தொண்டு நிறுவனம் சார்பாக தயான் சந்த் விருது பெற்ற ரஞ்சித் குமாருக்கு பாராட்டு விழா!

மதுரைக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாற்றுதிறனாளியான ரஞ்சித் குமார் இந்திய அரசின் உயரிய வாழ்நாள் சாதனையாளர் விருதான தயான் சந்த் விருதினை பெற்றுள்ளார். அவருக்கு சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா தொண்டு நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர்.பா.சரவணன் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் டாக்டர் சரவணன் பேசுகையில் : “இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் ரஞ்சித் குமார் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தேசிய அளவிளான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் அவரை போன்றே சாதிக்க துடிக்கும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளித்தும் வருகிறார். அவரை தற்போது இந்திய அரசாங்கம் தயான்சந்த் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மதுரைக்கு பெருமை சேர்த்த அவருக்கு பாராட்டு விழா நடத்துவது எனக்கு பெருமை அளிக்கிறது என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் வெளி மாநிலங்களில் இது போன்ற சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஸ்பான்சர்சிப் அளிக்கிறது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறான சூழ்நிலை இல்லை. எனவே அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் இவரைப் போன்ற விளையாட்டு வீர்ர்களுக்கு ஸ்பான்சர்சிப் வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

எங்களது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் ரஞ்சித் குமாருக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். ஊனமுற்றவர்கள் என்ற பெயரினை மாற்றுத்திறனாளிகள் என்று மாற்றி அவர்களுக்கென தனி துறையினையும் உருவாக்கியவர் தமிழினத் தலைவர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகள் நலனில் என்றும் அக்கறையுடன் இருப்பது திமுக மட்டுமே என்று டாக்டர் சரவணன் பேசினார்.

15 ஆண்டுகளுக்கு முன்பே டாக்டர் சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் போலியோவால் பாதிக்கப்பட்ட அவருக்கு காலிப்பர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பாராட்டு விழாவில் 50,000 ரூபாயினை அன்பளிப்பாக வழங்கி மேலும் அவர் பயிற்சி அளிக்கும் இரண்டு மாற்றுத்திறனாளிகள் கணேஷ், மனோஜ் ஆகியோருக்கு ஸ்பான்சர்சிப் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

தயான்சந்த் விருது பெற்ற தனக்கு மதுரையில் முதல் ஆளாக பாராட்டு விழா நடத்திய டாக்டர்.சரவணன் மற்றும் அவரது மருத்துவமனை பணியாளர்களுக்கும் ரஞ்சித் குமார் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 − = 79