ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சுரேஷ் ரெய்னா

13 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் சுரேஷ் ரெய்னா.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா உடனடியாக நாடு திரும்பியதாக சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பீதி காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. அதற்காக ஐபிஎல் அணிகள் கடந்த வாரம் முதல் ஒவ்வொன்றாக யுஏஇ சென்றடைந்தன. சிஎஸ்கே அணி ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றடைந்தது. அங்கு ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் நேற்று முடிந்த நிலையில், அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஒருவருக்கும், 12 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேரும் அவர்கள் தங்கியிருந்த துபாய் சொகுசு விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,’தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும்,’என்றும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடரில் இருந்து ரெய்னா விலகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 2