ஆன்லைன் சூதாட்டம் விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

ஆன்லைன் சூதாட்டம் குறித்து பதில் அளிக்க மத்திய மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தடை செய்யப்பட்ட ப்ளூவேல் விளையாட்டை விட ஆன்லைன் சூதாட்டம் ஆபத்தானது என்று மனுதாரர் கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானதால் சென்னை மாணவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் விபரீதம் தெரிந்தும் மத்திய அரசு மவுனம் காக்கிறது என்று மனுதாரர் மனுவில் புகார் தெரிவித்துள்ளார். சூதாட்டம் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது பெரும் அசம்பாவிதங் களுக்கும் வழிவகுத்து வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகநாடுகளை பீதியில் உறையவைத்துள்ள கொரோனா, மனித குலத்தின் வாழ்க்கை முறையை அடியோடு மாற்றியுள்ளது. தொழிலாளர்கள் வேலை இழந்து, வருவாய் இல்லாமல் தவித்து வரும் நிலையில் இளைஞர்கள் ஆன்ட்ராய்டு போன்களோடு வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர். மார்ச் 24ம்தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஆன்ட்ராய்டு செல்போன்களே, அவர்களது உலகம் என்று மாறிவிட்டது. இப்படி தொடர்ச்சியாக ஆன்ட்ராய்டு போன்களோடு பொழுதை போக்குவதால், உடல்நலம் குன்றி, மனஉளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 3