லால்குடி வட்டாட்சியர் அலுவலக அறைகளில் நாய்கள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சம்

லால்குடி வட்டாச்சியர் அலுவலக உள் வளாகத்தில் சுற்றி வரும் நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் நாய்களை வெளியேற்ற எந்த ஒரு அலுவலரும் முயற்சி மேற்கொள்ளாதது தாலுக்கா நிர்வாகத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் பணி செய்யும் இடத்தில் நாய்கள் அலுவலகத்தின் உள் வளாகத்தில் சுற்றி வருகிறது. அங்கு பணி செய்யும் ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது. கடைநிலை ஊழியர்கள் முதல் வட்டாச்சியர் வரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் நாய்களை விரட்ட யாரும் முன் வரவில்லை அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் நாய்கள் இருப்பதை கண்டு அஞ்சி அலுவலத்தின் உள்ளே செல்லாமல் பயந்து கொண்டு வெளியே நின்றனர் ஒருவேளை மக்களுக்கு பணி செய்யாமல் தவிர்ப்பதற்காக நாய்களை வளாகத்திற்க்குள் விட்டார்களா என மக்களுக்கு ஐயம் ஏற்பட்டது எனவே வரும் காலங்களில் நாய்கள்,பூனைகளை அலுவலக வளாகத்தில் விடாமல் பார்த்துக் கொண்டு பொதுமக்கள் ஐயமின்றி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வர ஆவண செய்ய வேண்டும் என பொதுமக்கள் குமுறுகின்றனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் நாய்கள் சுற்றிவருவதை வீடியோவாக படம்பிடித்த நபர்கள் அதை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் இது மேலும் பரவி வருவதால் அரசு அலுவலர்கள் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =