கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பணியாளர் பணி இடைநீக்கம்: சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர் பாஸ்கரன் தனது பணியை சரிவர செய்யாததால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டதன் பேரில் பாஸ்கரன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : கிருட்டிணகிரி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவமனை பணியாளர் என்.பாஸ்கர் என்பவர் தன் பணியை சரிவர செய்யாத காரணத்தினால் நோயாளிகள் அவதியுற ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானதை அறிந்த உடன் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் உத்திரவின்படி, அந்த பணியாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறையில் உள்ளவர்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்த போது

சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் மக்கள் நலன்சார்ந்து அரசு அதிகாரிகள் பணி செய்யாததால் அவர்கள் மீது துறை அமைச்சர் எடுத்து நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 − 70 =