மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் இக்குழுவின் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் காணொளி மூலம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி சென்னையில் இருந்து காணொளி மூலம் பங்கேற்றார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், அலுவலக தேசிய தகவல் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்(உறுப்பினர் மற்றும் செயலர்) சந்தீப் நந்தூரி, கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி மற்றும் பல்வேறு அலுவலர்கள் பய்கேற்றனர். இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் (தூத்துக்குடி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம்) ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 35 துறைகளிலிருந்து உரிய அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தின் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி காணொளி மூலம் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் விநியோகம், சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள், தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப் படும் மத்திய அரசு திட்டங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மத்திய அரசின் அனைத்து திட்ட பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 2