நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

கொரோனா வைரசிற்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், இயக்குனர் ராஜமவுலி போன்ற சினிமா பிரபலங்கள் பாதித்தனர். அந்த வரிசையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டார்லிங், யாகாவாராயினும் நா காக்க , கலகலப்பு – 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் லேசான காய்ச்சல் இருந்துள்ளது. உடல் பரிசோதனை மேற்கொண்டதில் கொரானா அறிகுறி இருந்துள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளது, “கடந்த வாரம் எனக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. நான், தற்போது வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன். எனது வருகைக்காக காத்திருந்த நெருங்கிய நண்பர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்கள், தொடர்ச்சியாக ஆதரவளித்த சென்னை மாநகராட்சி ஆணையத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 64 = 70