தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆ.வள்ளியப்பன், மாவட்ட பொருளாளர் க.முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழக அரசு மக்கள் நலன் கருதி காலியாகவுள்ள 750க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும் மற்றும் பணிபளுவிற்கேற்ப கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். கொரோனா தொற்று நிலை பணிகளில் உள்ள மருந்தாளுநர்களுக்கு தேவையான அளவில் என் 95மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருந்தாளுநர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த இழப்பீடு தொகை ரூ. 50,00,000 மற்றும் குடும்ப வாரிசுக்கு கருணை அடிப்படையிலான அரசு பணியினை நிபந்தனை யின்றி உடனடியாக வழங்க வேண்டும். எட்டு ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அனைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். 3.1.2018 மற்றும் 22.5.2018 அரசு செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

44 − 37 =