கிருஷ்ணகிரி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கட்சி சார்பில் சையது பாஷா தர்காவில் சிறப்பு தொழுகை

மக்கள் பணியின் போது கொரோனா தொற்றுக்கு ஆளான காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்த் குமார் விரைவில் பூரண நலம் பெற வேண்டி, கிருஷ்ணகிரியில், கிருஷ்ணகிரி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கட்சி சார்பில் சையது பாஷா தர்காவில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் வசந்த் குமார் கொடிய நோயான கொரோனா நோய் என்று கூட பார்க்காமல் தன்னுடைய தொகுதி மக்களுக்கு தொடர்ந்து செய்த மக்கள் பணியின் போது கொரோனா என்னும் பெருந்தொற்றுநோய் ஏற்பட்டதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் கொரோனா நோய் தொற்றில் இருந்து விரைவில் பூரண நலம் பெற வேண்டி கிருஷ்ணகிரியில் கிருஷ்ணகிரி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் முபாரக் தலைமையில் கிருஷ்ணகிரி அருகே சையது பாஷா தர்காவில், வசந்த் குமார் விரைவில் கொரோனா தொற்றுநோயில் இருந்து விடுபட்டு மீண்டும் மக்கள் பணி செய்ய வேண்டி சிறப்பு தொழுகையில் அனைவரும் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

75 − = 70