கிருஷ்ணகிரி: ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு செடிகளை நடும் ஆசிரியர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் எதிர்காக வளர்ச்சியை கருத்தில் கொண்டும் பள்ளிக்குச் சென்று தமது பள்ளியில் புதிதாக பல்வகை மலர் தோட்டம் தயாரிக்கும் பணியினை யார் துணையுமின்றி ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு செல்ல வேண்டியது இல்லை என்ற நிலை இருக்கும் போது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஒருவார காலமாக மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு ஆசிரியர்கள் சென்று வருகிறார்கள்.

பள்ளி தலைமை ஆசிரியர் செ.இராஜேந்திரன் வழிகாட்டலின் பேரில் உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே. இராஜ்குமார், ஜி.எம் சிவக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், தினமும் தமது சுய விருப்பத்துடனும், பள்ளியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும் பள்ளிக்குச் சென்று தமது பள்ளியில் புதிதாக பல்வகை மலர்த் தோட்டம், மூலிகைத் தோட்டம், காய்கறித் தோட்டம், அழகுச் செடிகள் தோட்டம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு என பல்வேறு வகையான பள்ளிப் பணிகளை மாணவர்கள் உள்ளிட்ட எவரின் துணையும் இன்றி ஆசிரியர்கள் மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் பல்வகை அழகிய தொட்டிகளில் செடிகளை வைத்தும், பள்ளி வளாகத்தில் உள்ள கடினமான நிலத்தைத் தோண்டி அதில் செடிகள் வைப்பது என பல்வேறு பணிகளை விருப்பத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சித் தலைவர் தி.வெங்கடேசன் ஒத்துழைப்பின் பேரில் ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் பள்ளி வளாகம் முழுவதும் இன்று சுத்தம் செய்யப்பட்டது.

இதை கண்ட பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்துக் கொண்டதோடு இக்கல்வி ஆண்டில் அதிக மாணவர்கள் பள்ளியில் புதிதாக சேர்வதற்கும் இச்செயல்பாடுகள் துணை புரியும் எனவும் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

53 − = 49