இன்று கெலாட் அரசு மீது பா.ஜ. நம்பிக்கையில்லா தீர்மானம்

ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் அரசு மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, பா.ஜ., முடிவு செய்துள்ளது. ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது.

சட்டசபை இன்று கூட உள்ள நிலையில், பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறியதாவது:அசோக் கெலாட் அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சச்சின் பைலட்டை காங்கிரஸ் சமாதானப்படுத்தி இருக்கலாம். ஆனால், கெலாட்டுக்கு எதிராக, சச்சின் மீண்டும் போர்க்கொடி துாக்குவார் .இப்போதும் பிரச்னை, நீறு பூத்த நெருப்பாகத் தான் உள்ளது. கெலாட் அரசு, ஐந்தாண்டுகள் முழுமையாக ஆட்சியில் நீடிக்காது என்பது நிச்சயம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + = 2