தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,61,459 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,146 பேர் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 5,397- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 − = 27