தஞ்சாவூரில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் தஞ்சை ரயிலடியில் இருமுனைப் போராட்டம்

மத்திய அரசின் மும்மொழி கல்வி கொள்கையை கண்டித்தும் தமிழ்நாட்டில் வெளியார் ஆக்கிரமிப்பைத் கண்டித்தும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் தஞ்சாவூரில் இருமுனை போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அண்மையில் மும்மொழி கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மும்மொழிக் கல்வி கொள்கையை கொண்டுவர மாட்டோம் என தமிழக அரசும் அறிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் தஞ்சை ரயிலடியில் இருமுனைப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். அதில் மத்திய அரசு மும்மொழிக் கல்விக் கொள்கையை கொண்டுவரக் கூடாது எனவும் மாநில அரசு வெளிமாநிலத்தவர்கள் வேலையில் அமர்த்த கூடாது. தமிழ்நாட்டில் தங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளிகளை வெளியேற்ற வேண்டும். தங்கள் தாயகம் திரும்பிய புலம்பெயர்ந்தோரை மீண்டும் அழைத்து வரக்கூடாது.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் 90% வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுத் துறையில் 100% தனியார் துறையில் 90% தமிழர்களுக்கே வேலை தரவேண்டும். இதற்கான சட்டங்களை தமிழக அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்து தமிழ்நாடு வந்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது. மத்திய அரசின் புதிய கல்வித் திட்டம் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பாட சுமைகளை அதிகப்படுத்துகிறது.

எனவே மத்திய அரசு புதிய கல்வி திட்டத்தை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வைகறை, மாநகர செயலாளர் ராமசாமி, மகளிர் ஆயம் அமைப்பாளர் லட்சுமி, மாவட்ட அமைப்பாளர் செம்மலர் உள்ளிட்ட தமிழ் தேசிய பேரியக்க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

50 − = 46