ரஷ்யாவில் உயிரிழந்த மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர்

சென்னை: ரஷ்யாவில், வோல்கா ஆற்றில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்களின் உடலை சொந்த ஊர்களுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ரஷ்யாவின் வால்கோகிராட் மாகாண மருத்துவ பல்கலையில், மருத்துவம் பயின்ற திருப்பூரை சேர்ந்த ஆஷிக், கடலூரை சேர்ந்த விக்னேஷ், சென்னையை சேர்ந்த ஸ்டீபன் சேலத்தை மனோஜ் ஆகியோர், நேற்று முன்தினம்(ஆக.,8) அந்நாட்டில் உள்ள லோல்கா ஆற்றில் குளித்த போது எதிர்பாராத விதமாக சுழற்சியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி மன வேதனை அளித்தது . அவர்களின் குடும்பத்தினருக்கு அழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த துயர செய்தி அறிந்தவுடன், மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு, உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவரவர் ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, அரசு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் பேரில், அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளையும் தமிழக உயர் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 + = 82