திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொன்மலை பணிமனையில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்த்தித்து “இரயில்வேயில் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பில் பிற மாநிலத்தவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதை கண்டித்து கடிதம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வடமாநிலத்தவரை மத்திய பாஜக அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற பெயரில் வரும் சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத்தேர்தலிலும் வடநாட்டவரின் செல்வாக்கால் வாக்கு வங்கியை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு ஆளும் அதிமுக மாநில அரசு ஒத்துழைப்பை முழுமையாக கொடுத்து வருகின்றது. அந்த வகையில் திருச்சி பொன்மலை பணிமனையில் ஊரடங்கு காலகட்டத்தில் வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு பணிவாய்ப்பளித்து அவர்களை முழு அக்கரையுடன் திருச்சிக்கே அழைத்து வந்து சான்றிதழ் சரிபார்ப்பு வரை முடிந்துவிட்டது.

இது குறித்து விபரமறிந்த ரயில்வே ஊழியர்களின் வாரிசுகள், பொன்மலை பணிமனையில் அப்ரண்டிஸ் முடித்த இளைஞர்கள் போராட்டக்களத்தில் குதித்தனர். அந்தவகையில் திருச்சி பொன்மலை பணிமனை முன்பு திமுக தலைமையில், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆர்மரிகேட் பணிமனை வாயில் முன்பு அறப்போராட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு பணிமனை மேலாளரை சந்தித்து “இரயில்வேயில் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பில் பிற மாநிலத்தவருக்கு முன்னிரிமை கொடுக்கப்படுவதை கண்டித்து கடிதம் வழங்கப்பட்டது.

உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், மாவட்ட சட்ட பாதுகாப்புக்குழு செயலாளர் வழக்கறிஞர் தினகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2