160 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு களித்த ராமர் கோவில் பூமி பூஜை ஒளிபரப்பு

புதுடில்லி: ராமர் கோவில் பூமி பூஜை விழாவை உலகம் முழுவதும் 160 மில்லியனுக்கும் அதிகமானோர் டி.வியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி மூலம் கண்டுகளித்ததாக பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி வெம்பதி டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: கடந்த 5 -ம் தேதி உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பூமி பூஜை விழாவை தூர்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்பியது.

5-ம் தேதி புதன்கிழமை காலை 10.45 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியை 200க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் தூர்தர்ஷனிடமிருந்து பெற்று நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. இதன் மூலம் 160 மில்லியனுக்கும் மேலான மக்கள், 7 பில்லியன் மணித்துளிகள் நேரம் பார்த்துள்ளனர். இவ்வாறு பதிவிட்டு உள்ளார். இதுவரையில் இந்தியாவில் நடந்த நிகழ்ச்சியை இவ்வளவு பார்வையாளர்கள் பார்த்தது இதுவே முதல்முறை ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

61 − 52 =