திருச்சி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி வாயிலாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரிடம் கலந்துரையாடல்

திருச்சி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி காட்சி வாயிலாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரிடம் கலந்துரையாடினார்.

அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 19.9.2019 அன்றே ரயில்வே துறை, மின்சாரத்துறை மற்றும் பல துறைகளிலும் வடமாநிலத்தவர்கள் பணியில் புகுத்தப்படுவதையம் அதை இங்கு உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டித்து தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்” என்று தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை பணியாளர் நியமன பிரச்சனை சம்மந்தமாக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி காட்சி வாயிலாக, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரிடம் கலந்துரையாடினர்.

பொன்மலை ரயில்வே பணிமனையில் எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பணிக்கு வடமாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை சான்றிதழ் சரிபார்ப்பிற்காக வர இ-பாஸ் கிடைத்தது எப்படி, ரயில்வே பணி சான்றிதழ் சரிபார்ப்புக்கு வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் எப்படி பாஸ் கிடைத்தது என கூறி தமிழக அப்ரண்டீஸ் மாணவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கொரோனா பாதிப்பினால் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, முக்கிய பணிகளுக்கு மட்டும் இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று முன்தினம் பொன்மலை பணிமனையில் துவங்கி நடந்து வருகிறது. மூன்று நாட்களாக நடக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் 581 நபர்கள் கலந்து கொண்டனர் .

இதில் வட மாநிலத்தவர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது, மேலும் இரண்டாவது நாளாக சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று 150க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பொன்மலை பணிமனைக்கு எதிரே உள்ள திருமண மண்டபத்தில் ஒன்று கூடினர். இதுகுறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் பன்னாட்டு சங்கம் மற்றும் முன்னாள் அப்ரண்டீஸ் மாணவர்கள் என ஏராளமானோர் “ரயில்வே பணிமனை” முன்பு திரண்டு மத்திய அரசை கண்டித்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்களுக்கு எவ்வாறு இ-பாஸ் கிடைத்தது எனவும் இங்கு அவர்கள் எப்படி வந்தனர் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில்: சென்னை ரயில்வே பொதுமேலாளர் உத்தரவின் பேரில் விமானம் மூலம் திருச்சி வந்ததாக கூறினர். கொரோனா தற்போது திருச்சியில் வேகமாக பரவி வரும் நிலையில், வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது எப்படி என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதை அறிந்த திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்டத்தின் மாவட்ட பொறுப்பாளருமான, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்றைய தினம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரருடன் காணொளி காட்சி வாயிலாக இப்பிரச்சனையின் வீரியத்தை அறிந்து டெல்லியில் உள்ள ரயில்வே துறை அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து தீர்வு காண வலியுறுத்தினார். இல்லையெனில் களத்தில் மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுப்பது என கலந்துரையாடினர்.

அப்பொழுது இறுதியாக சட்டமன்ற உறுப்பினர், மத்திய மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழகத்தில் நிரப்பப்படுகின்ற வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 27 = 37