திருச்சியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவுநாள் அனுசரிப்பு

திருச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் ஆலோசனைப்படி கட்சி முதன்மை செயலாளர் அலுவலகத்தில் கலைஞரின் திருஉருவ படத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர் அன்பழகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று உறையூரில் பகுதி செயலாளர் இளங்கோ தலைமையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள், பகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − = 28