தமிழகம் முழுவதும் ரேஷன் கடைப்பணியாளர்கள் ஆகஸ்ட் 10 முதல் வேலை நிறுத்தம் மாநிலப் பொதுச்செயலாளர் தகவல்

தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆகஸ்ட் 10முதல் துவங்கும் என ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் தேனி ஜெயச்சந்திரராஜா தெரிவித்தார்.

இது பற்றி ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரராஜா தெரிவித்துள்ளதாவது: கொரேனாவால் இறந்த 3 ரேஷன் கடைப்பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மருத்துவக் குழு காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகியுள்ளதாக ஜெயச்சந்திரராஜா தெரிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி வேலை நிறுத்தத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தேனி ஜெயச்சந்திரராஜா கூறும் போது கொரேனாவால் இறந்த 2 பேருக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க அரசு அறிவித்துள்ளது. திருத்தணி அன்பழகன், மதுரை கார்த்திகேயனுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாநில நிர்வாகிகளை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இந்த போராட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + = 9