தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை தெரிவரித்துள்ளதாவது: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,32,618 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,043 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 53,481 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,808 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94,100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11,734 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 20 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,290 ஆக உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 2