சேலத்தாம்பட்டி ஏரியை சீரமைத்து பூங்கா மற்றும் பறவைகள் சரணாலயம் அமைக்க பசுமைத்தாயகம் அமைப்பு திட்டம்: திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு

சேலம் அருகே 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலத்தாம்பட்டி ஏரியை சீரமைத்து பூங்கா மற்றும் பறவைகள் சரணாலயம் அமைக்க பசுமைத்தாயகம் அமைப்பு திட்டம். இந்த திட்டப் பணிக்கு இடையூறாக சேலத்தாம்பட்டி பஞ்சாயத்து திமுக நிர்வாகிகள் பணம் கேட்டு மிரட்டுவதாக பசுமை தாயகம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

சேவை மனப்பான்மையுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தங்களது சொந்த செலவில் செய்யும் இந்த முயற்சிக்கு இடையூறாக இருக்கும் திமுக நிர்வாகிகள் மீது சேலம் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுமைத்தாயகம் அமைப்பு மற்றும் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், சேலம் ஒன்றியம் சிவதாபுரம் அருகே உள்ளது சேலத்தாம்பட்டி ஏரி. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஒரு காலகட்டத்தில் அந்தப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான பராமரிப்பு இன்றி காணப்பட்ட இந்த சேலத்தாம்பட்டி ஏரியில் ஆங்காங்கே முட்புதர்களும் மண்டி கிடந்தது.

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் பெய்யும் அதிகப்படியான மழையின் காரணமாக 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த செயலகம் படியேறி நிறைந்து ஏரியை ஒட்டியுள்ள கந்தம்பட்டி துணை மின் நிலையத்தை நீர் ஆக்கிரமிப்பதோடு எஞ்சிய நீர் சேலம் சிவதாபுரம் சித்தர் கோவில் பிரதான சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். சேலத்தாம்பட்டி ஏரி நிறைந்து வழிந்தோடும் மழை நீரினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் சிவதாபுரம் பகுதியிலுள்ள ஆண்டிப்பட்டி ஏறி மற்றும் சேலத்தாம்பட்டி ஏரி ஆகியவற்றை சேலம் மாவட்ட நிர்வாகத்தின் முழுமையான ஒப்புதலுடன் அந்த ஏரியை சீரமைக்கும் பணியினை கையில் எடுத்தது.

ஆண்டிப்பட்டி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் முட்புதர்கள் அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒப்புதலின் பேரில் இந்த இரண்டு ஏரிகளையும் பசுமைத்தாயகம் அமைப்பு மற்றும் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவை கையிலெடுத்து சேலத்தாம்பட்டி ஏரியை சுற்றியுள்ள முட்புதர்கள் அதாவது குடிநீர் ஆதாரத்தை முற்றிலுமாக அழித்து வரும் கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியான கனமழையின் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி முழுவதுமாக நிறைந்து கடல் போல் காட்சி அளித்து வருகிறது. இதன் காரணமாக பசுமை தாயகம் அமைப்பின் ஏரியை சீரமைக்கும் பணி அதாவது ஏரியை முற்றிலுமாக தூர்வாரி அதனை ஆழப்படுத்தி அதிகப்படியான நீர் தேங்க வைத்து இந்த ஏரியை சுற்றுலா தலமாக மாற்றி அங்கு பூங்கா மற்றும் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அமைப்பினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆதாயம் இல்லாமல் பசுமைத்தாயகம் அமைப்பு மற்றும் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் இந்த ஏரிகளை அரசின் அனுமதி பெற்று செய்வதற்கான சாத்தியம் இல்லை அதில் தங்களுக்கு மிகுந்த பொருளாதார வரவு உள்ளது எனக்கூறி சேலத்தாம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தொடர்ச்சியாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை மனப்பான்மையுடன் செய்யும் இந்த அமைப்பினருக்கு தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. என்றாலும் திமுகவினரின் இந்த மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் ஏரிகளை சீரமைத்து அதனை சுற்றுலாத் தலங்களாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வரும் இந்த சேவை அமைப்பினர் தொடர்ச்சியாக தங்களது பணியினை செய்து வருகின்றனர். என்றாலும் இவர்களது சமுதாயப் பணிக்கு தொடர்ச்சியாக திமுகவினர் மிரட்டல் விடுத்து வருவதால் பெரும் மன வேதனையில் உள்ளனர் இந்த சமூக அமைப்பினர்.

இதுகுறித்து பசுமை தாயகம் அமைப்பின் மாநில துணை செயலாளர் ஆனந்தராஜன் கூறுகையில்: சேலத்தாம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி ஏரி மற்றும் சேலத்தாம்பட்டி ஏரியை தமிழக அரசின் முழு ஒப்புதலுடன் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியும் சம்மந்தப்பட்ட இரு ஏரிகளையும் சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தாங்கள் முயற்சிக்கும் நிலையில் சேலத்தாம்பட்டி பஞ்சாயத்து திமுக நிர்வாகிகள் தங்களிடம் தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டி வருவதோடு தங்களது பணியை மேலும் செய்யவிடாமல் தடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

100 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலத்தாம்பட்டி ஏரியில் 30 ஏக்கர் நிலம் தங்களால் அங்கு ஆக்கிரமித்திருந்த கருவேல மரங்களை வேருடன் அகற்றி அந்த இடத்தில் பொழுதுபோக்கு அம்சமான பூங்காவுடன் கூடிய பறவைகள் சரணாலயம் அமைக்க திட்டமிட்டுள்ள தங்களது பணிக்கு திமுகவினர் தொடர்ச்சியாக தடை விதித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது என்று வருத்தம் தெரிவித்த அவர் சேலம் மாநகரின் மையப் பகுதியில் மூக்கு நேரில் அமைக்கப்பட்டுள்ளது போல இந்த சேலத்தாம்பட்டி ஏரியிலும் பத்துக்கும் மேற்பட்ட மணல் திட்டுகள் அமைத்து அங்கு பறவைகள் வந்து அமர்ந்து உண்டு மகிழும் வகையில் பலவகையான பழ மரங்கள் நட்டு வைப்பதுடன், ஏரியை சுற்றிலும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பசுமை பகுதியாக மாற்ற தாங்கள் முயற்சித்து வருவதாகவும் இந்த பணி நிறைவடைய சுமார் ஒரு வருட காலம் ஆகும் என்றும் தெரிவித்த ஆனந்தராஜன் தங்களது பணியை செய்து மாநகர பகுதியை அடுத்துள்ள சிவதாபுரம் பகுதியில் ஒரு சுற்றுலாத்தலம் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் தங்களது முயற்சியை வேண்டுமென்றே பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சம்மந்தப்பட்ட ஏரியை சீரமைத்து அந்த ஏரி பகுதியை ஆக்கிரமிக்க பசுமைத்தாயகம் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பொதுமக்களை திரட்டி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்போம் என்றும் மேலும் இது சம்மந்தமாக சேலத்தாம்பட்டி பஞ்சாயத்தில் பசுமைத்தாயகம் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு ஏரிகளையும் மீட்க தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளதாக திமுகவினர் மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் முழு ஒப்புதலோடு பெறப்பட்ட இந்த ஏரி சீரமைப்பு பணியை பசுமைத்தாயகம் அமைப்பினரிடம் இருந்து அதனைப் பிடுங்கி சேலத்தாம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் குடிமராமத்து பணி மேற்கொண்டு அதன் மூலமாக பல லட்ச ரூபாய் கையாடல் செய்ய திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பசுமைத்தாயகம் அமைப்பு மற்றும் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு தயாரிப்பாளர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூக சேவையுடன் இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்று ஒரு சமுதாய அக்கறையுடன் தாங்கள் மேற்கொள்ளும் பணியை தொடர்ச்சியாக அடுத்து வரும் சேலத்தாம்பட்டி பஞ்சாயத்து திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தங்களது பணிக்கு எவ்வித இடையூறுமில்லாமல் நடைபெற்று சிவதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்களின் பொழுது போக்கு அம்சமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சேலம் மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே பசுமை தாயகம் மற்றும் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கையாக உள்ளது.

இதில் பசுமைத்தாயகம் அமைப்பின் மாநிலத் துணைச் செயலாளர் ஆனந்தராஜ் உடன் இந்த சமுதாயப் பணியில் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு தயாரிப்பு சங்க நிர்வாகிகள் தேவேந்திரன் முனியப்பன் பூபதி மற்றும் ரவி உள்ளிட்டோர் கைகோர்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1