கேரள விமான விபத்து: பலியானோர் குடும்பத்தினருக்கு பாக்.பிரதமர் இரங்கல்

இஸ்லாமாபாத்: கேரளா கோழிக்கோடு விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பாக். பிரதமர் இம்ரான இரங்கல் தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் போயிங் விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாயினர்.

இந்த விமான விபத்து குறித்து பாக். பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கேரளா மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமையை கொடுப்பார்’ . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

81 − = 80