கிருஷ்ணகிரியில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, கெலமங்கலம் பேரூர், செந்தில் நகரில், நாராயணன், மஞ்சு, சண்முகம், திவாகர், வெங்கடேஷ், சுரேஷ், மீனா, மணிமேகலை, ராசாத்தி, ஜெயலட்சுமி ஆகியோரது தலைமையில் அப்பகுதியில் கட்சி கொடியேற்றி, மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ், மாவட்ட துணைச்செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான பி.முருகன், மாநகர பொறுப்பாளரும், ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஏ சத்யா ஆகியோர் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இணைந்து கொண்டனர்.

உடன் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், கெலமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், தேன்கனிக்கோட்டை பேரூர் செயலாளர் சீனிவாசன், அவைத்தலைவர் நாகராஜ், துணைச்செயலாளர் முனிராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர் சீனிவாசன், சின்னராஜ், ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முருகேசன், அசோக், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தேவராஜ், தஷ்தகீர், மிதுன் சக்ரவர்த்தி, சக்திவேல், லிங்கோஜி, சங்கரப்பா, சிரிதர், ஒன்றிய முக்கிய நிர்வாகிகள், கெலமங்கலம் முக்கிய நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − 34 =