கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சேலம் பனமரத்துப்பட்டி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சேலம் பனமரத்துப்பட்டி திமுக ஒன்றிய கழகத்தின் சார்பில் 5000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சேலம் பனமரத்துப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் மற்றும் சேலம் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் ஆகியோர் வழங்கினர்.

திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் திமுகவினரால் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் பேரிலும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வழிகாட்டுதல் படியும் சேலம் பனமரத்துப்பட்டி திமுக ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட 18 பஞ்சாயத்துக்களில் திமுகவினரால் கட்சி கொடி ஏற்றப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஏழை, எளிய பயனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.

இதனிடையே சேலம் பனமரத்துப்பட்டி திமுக ஒன்றியத்திற்குட்பட்ட 18 பஞ்சாயத்துகளில் மற்றும் இரண்டு பேரூராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சேலம் பனமரத்துப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், சேலம் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் திமுக கட்சி கொடிகளை ஏற்றி வைத்தும், கலைஞர் கருணாநிதியின் திரு உருவ படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் ஏழை எளியவர்கள், ஊனமுற்றவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியதுடன் காலை உணவு, மதிய உணவு மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சீருடை ஆகியவற்றை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிகளில் சேலம் மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளர் சங்கர் உட்பட சம்மந்தப்பட்ட பகுதி திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 34 = 41