கந்தர்வகோட்டையில் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கல்

தமிழின தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன் வழிகாட்டுதலின் படி கந்தர்வகோட்டையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நா.ஸ்டாலின் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம், இந்திரா நகர், குமரன் காலனி ஆகிய பகுதியில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகில் உள்ள நேஷ்னல் மளிகை கடையில் ஆதரவற்றவர்களுக்கு அரிசி, உணவுப் பொருட்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கருப்பையன், கந்தர்வகோட்டை நேஷ்னல் மளிகை கடை உரிமையாளர் அசாருதீன், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரசூல், இந்திராகாந்தி, கருணாநிதி, நிரோஷா, சுரேஷ், பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

46 + = 56