இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 61,537 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவரித்துள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 20,88,611 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 6,19,088 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,14,27,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் 933 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 42,518 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 68.32% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.04% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 29.64% ஆக உள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

46 − 40 =