புதுக்கோட்டையில் புதிய ஓவியர்கள் சங்கம் துவக்கம்

புதுக்கோட்டையில் புதிய ஓவியர்கள் சங்கம் மறைந்த ஓவியர் திலகம் எஸ்.ராஜாவின் நல்லாசியுடன் புதுக்கோட்டை மாவட்ட ஓவியர்கள் முன்னேற்ற நலச்சங்கம் (பதிவு எண்: 77/2020) என்ற பெயரில் புதிய சங்கத்தின் தொடக்க விழா புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.

இதில் சங்கத்தின் தலைவராக ஓவியர்.பி.வெங்கடேசன், செயலாளராக ஓவியர்.சித்ரகலா ரவி, பொருளாளராக ஓவியர்.சசி கணேசண் மற்றும் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ஆர்.சரவணன், சி.மாரிமுத்து, ஆர்.பாண்டியன், ஏ.அறிவழகன், அ.சா.புவனேஸ்வரி, வி.குமாரவடிவேலு, ஜி.பாலமுருகன், எஸ்.ஆனந்தன், எஸ்.பாலசுப்பிரமணியன், எம்.தனபாலகிருஷ்ணன், ஏ.அழகேசன், ஆர்.விஜயலெட்சுமி, எம்.முருகவேல், பி.வெங்கடேசன், எஸ்.சுந்தரக்குமார், என்.கே.பாண்டியன், கே.பி.முருகேஷ், ஆர்.முத்துக்குமார் ஆகியோர் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள ஓவியம் தொழில் செய்பவர்களை ஒன்று கூட்டி ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருதல், அமைப்பின் விதிமுறைகளுக்குட்பட்டு உதவி செய்தல். தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் ஓவியர்கள் நல வாரிய சலுகைகள் அனைத்தையும் வாரியத்தில் பதிவு பெற்று அனைத்து ஓவியர்களுக்கும் பெற்றுத் தருதல் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்நிகழ்வின் முடிவில் செயலாளர் ஓவியர்.சித்ரகலா ரவி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + = 11