தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை தெரிவரித்துள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 62,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 886 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 49,769 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,27,575 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,488 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,690- ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =