கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் அதிமுக, தேமுதிக, உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட, அஞ்சூர் பகுதியை சேர்ந்த தேமுதிக, அதிமுக, பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அஜித் ரசிகர் மன்றம், விஜய் ரசிகர் மன்றம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் பர்கூர் திமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் முன்னிலையில் திமுகவில் இணையும் விழா அஞ்சூர் கிராமத்தில் நடைபெற்றது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் தலைமையிலும், அஜித் ரசிகர் மன்றம் உறுப்பினர்கள் அருண் தலைமையிலும், விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் சத்யராஜ் தலைமையிலும், அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.
அனைவருக்கும் பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராஜன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அஞ்சூர் கிளை செயலாளர் குப்புசாமி, லட்சுமி அண்ணமலை, கவிதா, மகேந்திரன் சத்யா, சின்னசாமி, ராஜா, மாது, ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.