முழு ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த ஆதரவற்றோருக்கு அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து உத்தரவிட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உணவின்றி தவித்தவர்களுக்கு அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையம், ரெயில் நிலையம், மன்னார்புறம், டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும் நிறுவனருமான மக்கள் அரசர் டாக்டர்.சு.ராஜா மற்றும் பொதுச்செயலாளர் மக்கள் சேவகர் ரமேஷ்குமார் ஆகியோர் ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர். இதில் அறம் மக்கள் நலச்சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருப்பதிராஜ், இணைச்செயலாளர் அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம், திருப்பூர், மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

88 + = 91