தமிழகத்தில் இன்று 5875 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,57,613-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 17,50,723 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,735 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,364ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,45,629 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,67,730 உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,96,483 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 5,517 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 − = 38