லயன்ஸ் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

வறுமை நிலையில் வாடும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு, இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நேற்று வீடு தேடிச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மரக்காவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது வறுமையான குடும்ப சூழலை அறிந்த, பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கத்தினர், அவரது குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் நினைவு தினம் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் இளங்கோ தலைமையில் பயனாளியின் இல்லத்துக்கே சென்று வழங்கினர்.

அப்போது பொருளாளர் பன்னீர் செல்வம், நிர்வாக அலுவலர் பொறியாளர் சந்தோசம், நிர்வாகிகள் அப்துல்கபூர், ஊராட்சி மன்றத் தலைவர் பொறியாளர் சரவணன், ராமச்சந்திரன், பெருமாள், பாலசுப்பிரமணியன், நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் குமார் என்ற பழனிவேலு நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 4 =