பேராவூரணி அருகே விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம்

பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தஞ்சை, புதுகை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில மீனவர் பேரவை பொதுச் செயலாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். புதுகை மாவட்ட தலைவர் சின்னஅடைக்கலம், பாலமுருகன், ராமநாதபுரம் மாவட்ட வடக்கு கோபி, ராஜா தஞ்சை மாவட்ட ராஜமாணிக்கம், வடுகநாதன், இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அண்டை மாநிலங்களில் வழங்குவது போல் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கி மானிய தொகையை பில் வெளியிலேயே கழித்து வழங்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என்ற பல நாட்கள் கோரிக்கையாக இருந்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதை நிறைவேற்றித் தந்தார்கள். தற்போதைய அம்மாவின் அரசு அதை மாற்றும் முகமாக மானியத் தொகையை வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தி விடப்படும் என்று கூறுவது மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பை ஏற்படுத்தும், எனவே வழக்கம்போல் உள்ள நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.

இன்று ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய முறையின் நடைமுறைக்கு வரும் என்று அரசின் இத்திட்டத்தை கைவிட வேண்டும். புதிய முறைக்கு நடைமுறைக்கு கொண்டு வருமேயானால் பழைய முறை வரும் வரை தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்வது என்றும், தங்களுடைய படகிலும், வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்படுகிறது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், உரிமைகளையும் பறிக்கும் தேசிய மீன்வள கொள்கை 2020 வரைவு மசோதாவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய தொழில் முறையையும் உரிமைகளையும் பாரித்திட வழிவகை செய்திடும் தேசிய கடல் மீன் வள ஒழுங்குமுறை கொள்கை வரைவு 2020 மசோதாவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

கொரோனா வைரஸ் போல் ஏறிவரும் டீசல் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு விலை குறைப்பு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். டீசல் மீது 65 சதவீத விழுக்காடு வரிகள் மட்டுமே அதிக அளவில் இருப்பதால் வரிகளை குறைத்து டீசல் விற்க வேண்டும். கடலையே பயன்படுத்தி வரும் மீனவர்களுக்கு சாலை வரி மற்ற இதர வரிகளையும் நீக்கம் செய்து, அதிக அளவில் அன்னிய செலவாணியை ஈட்டிவரும் மீனவர்களுக்கு உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும் என மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 − = 21