பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய வீரர் வீரமரணம்

ரஜோரி: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் சிப்பாய் ரோகின் குமார், காயமமடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்ததாக, பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களாகவே மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =