தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவராணம் கோரி நுதான போராட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல வாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவராணம் ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் அறிவித்தும் நிவாரணம் வழங்காததை கண்டித்து தட்டேந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ஞானம், மாவட்டத் தலைவர் மனோகரன், செயலாளர் காந்தி ஆகியோர் மனு அளித்தனர். மாநில பொதுச் செயலாளர் ராஜன் கூறும் போது நிவாரண நிதி 17 மாவட்டங்களுக்கு மட்டும் ஓதுக்கீடு செய்துள்ளனர். தேனி மாவட்டத்திற்கு 1460 பேருக்கு நிதி ஓதுக்கி 18 நாட்கள் ஆகியும் வழங்க வில்லை. விரைந்து வழங்க மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =