திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது

திமுகக தலைவர் தலைமையில் காணொலிக் காட்சியின் வாயிலாக 30.7.20 அன்று நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தெற்கு மாவட்ட கழக செயற்குழுக் கூட்டம், மாவட்ட கழக பொருளாளர் கோவிந்தராஜ், தலைமையில் காணொலியின் வாயிலாக இன்று நடைபெற்றது, கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு உரையாற்றும் போது:

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை நமது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக அனுசரிக்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் ஒன்றிய பகுதி பேரூர் நகர பொறுப்பாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர் நிறைவாக கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரும் 7.8.2020 அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற பணியாற்றிட பணியாற்றி வரும் கொரோனா போராளிகள் என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் காவல்துறையினரை தூய்மை பணியாளர்களை சிறப்பு செய்வது என்றும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழகங்களில் வழங்குவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கிறது.

சமூகநீதி சட்ட போராட்ட வழக்கில் இந்த தலைமுறை மட்டுமின்றி எதிர்கால தலைமுறையும் காப்பாற்றும் போற்றுதலுக்குரிய சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது என்றும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்து இருக்கின்ற தீர்ப்பைப் பெற்று தந்த தலைவர் கலைஞர் வழியில் நின்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்று தந்த சமூகநீதி வெற்றிக்கு பாராட்டும் பெருமிதமும் இக்கூட்டம் கொள்கின்றது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கின்றது காவிரி டெல்டா பகுதியை சாகாரா பாலைவனமாக அதிமுக அரசின் துணையோடு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தையும் விவசாயிகளும் மக்களும் கடுமையாக தினமும் எதிர்த்துப் போராடி வருகின்றார்கள். இந்த நிலையில் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்தி அவற்றை எல்லாம் சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லாத பட்டியலில் சேர்த்து பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டங்களை பலவீனப்படுத்தி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவிற்கு மத்திய அரசே தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது செலுத்தும் புதிய சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 ஐ திரும்பப்பெற கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 1