திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் கொடைக்கானலில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

கொடைக்கானலில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி கொடைக்கானல் சென்றார். வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே உள்ள நகராட்சி சோதனை சாவடியை ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா நோய்த்தொற்று அதிகம் பாதித்த அண்ணா நகர், இந்திரா நகர், பாக்கியபுரம் ஆகிய பகுதிகளை பார்வையிட்ட அவர், நோய்ப்பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில், கொரோனா நோயாளிகளுக்கென புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தைப் பார்வையிட்டார். கொடைக்கானல் நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில், கொரோனா நோய் பற்றிய விழிப்புணர்வை, பொதுமக்களிடம் அதிகளவில் ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நகரில் புதிதாகப் போடப்பட்ட தார்ச்சாலைகளைப் பார்வையிட்டார்.

கொடைக்கானல் நட்சத்திர ஏரியைச்சுற்றிலும் 2 கோடியே 36 லட்ச ரூபாய் செலவில், 4 கி.மீ., தூரத்திற்கு புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை பணிகளை பார்வையிட்டார். அருகில் கோட்டாட்சியர் சிவகுமார், தாசில்தார் அரவிந்த், நகராட்சி கமிஷ்னர் நாராயணன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 3