தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,90,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 7,010 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 56,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 99 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,034 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,00,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 86,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12,436 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 27 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,140 ஆக உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 64 = 68